உத்தர பிரதேசத்தின் ப்ரயாக்ராஜில் நடந்து வரும் கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் ப்ரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் மகா கும்பமேளா உலக பிரசித்தி பெற்றது. தற்போது கும்பமேளா கடந்த ஜனவரி 14ம் தேதி தொடங்கி வருகிற 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. 45 நாட்கள் நடைபெறும் இந்த கும்பமேளாவில் இதுவரை 30 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் கும்பமேளாவில் தற்போது மீண்டும் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பழைய ஜிடி சாலையில் உள்ள துளசி சௌராஹா என்ற இடத்தின் அருகே அமைந்துள்ள பக்தர்கள் தங்கும் முகாமில் ஏற்பட்ட திடீர் தீயால் பக்தர்கள் சிலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உடனடியாக தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தினசரி லட்சக்கணக்கான மக்கள் கும்பமேளாவிற்கு வருகை தருகின்றனர். ஆனால் அவ்வளவு பக்தர்களையும் சமாளிக்கும் வகையில் கும்பமேளா ஏற்பாடுகள் இல்லை என்ற புகாரும் உள்ளது. கும்பமேளா தொடங்கிய சில நாட்களிலேயே பக்தர்கள் தங்கும் முகாம்களில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கடந்த 29ம் தேதி ஏற்ப்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியானார்கள். ஆனால் இன்னமுமே கூட அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக செய்யப்படாததால் மீண்டும் தீ விபத்து எழுந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
Edit by Prasanth.K