2034ஆம் ஆண்டு தான் மகளிர் இட ஒதுக்கீடு சாத்தியமாகும்: கபில்சிபல்

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2023 (16:58 IST)
மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு மசோதா தற்போது தாக்கல் செய்யப்பட்டாலும் இந்த இட ஒதுக்கீடு 2034 ஆம் ஆண்டுதான் சாத்தியமாகும் என்று காங்கிரஸ் கட்சியின் கபில்சிபல்தெரிவித்துள்ளார். 
 
2029 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அமலுக்கு வர வாய்ப்பு இல்லை என்றும் ஏனெனில் 2026 ஆம் ஆண்டுக்கு பின்னர் தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி தொகுதி மறு வரையறை செய்யப்படும் என்றும் எனவே  2029 ஆம் ஆண்டிலும் மகளிர் இட ஒதுக்கீடு வர சாத்தியமில்லை என்றும் 2034 ஆம் ஆண்டு மகளிர் மக்களவைத் தேர்தலில் தான் மகளிர் இட ஒதுக்கீடு சாத்தியமாகும் என்றும் கபில்சிபல் தெரிவித்துள்ளார். 
 
பாஜக நினைத்திருந்தால் 2014 ஆம் ஆண்டிலேயே இந்த மசோதாவை நிறைவேற்றி இருக்கலாம் என்றும் ஆனால் வேண்டுமென்றே காலதாமதம் செய்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்