தமிழகத்தில் பண்டிகை காலம் நெருங்கினாலே ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.
கடந்த டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி தமிழகத்தில் ஆம்னி பேருந்து கட்டணம் இரண்டு முதல் மூன்று மடங்கு உயர்ந்து உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
அந்தவகையில், மதுரை கோயம்புத்தூர் திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னைக்கு பேருந்து கட்டணம் ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து ரூபாய் 2000 முதல் 4500 வரை உயர்ந்துள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், வரும் பொங்கல் பண்டிகையொட்டி சென்னை உள்ளிட்ட பகுதியில் இருந்து பொதுமக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்குச் செல்ல உள்ள நிலையில். ஆம்னி பேருந்துகள், சிறப்பு பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இந்த நிலையில், ஆம்னி பேருந்துகளில் கட்டணம் வசூலித்தால் 044- 24749002, ஆகிய எண்ணிலும், சிறப்பு பேருந்தில் அதிக கட்டணம் வசூலித்தால் 94450 14450 ஆகிய எண்ணில் புகார் அளிக்கலாம் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையொட்டி 10,749 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.