வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு.. இந்த மாதம் என்ன விலை?

Webdunia
வெள்ளி, 1 டிசம்பர் 2023 (07:57 IST)
ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அன்று சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும் என்ற நிலையில் இன்று சிலிண்டர் விலை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

இந்த அறிவிப்பில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 26 ரூபாய் 50 காசு அதிகரித்து  ரூ.1968.50 என விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் ரூ.918.50க்கு என தொடர்ந்து விற்பனையாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

 இருப்பினும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்ந்து உள்ளதால் டீ, காபி மற்றும் உணவு பொருட்களின் விலை உயர வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்