பஞ்சாப் எல்லையில் பறந்த மர்ம ட்ரோன்.. சீனாவை சேர்ந்ததா?

Mahendran
சனி, 22 ஜூன் 2024 (15:04 IST)
பஞ்சாப் எல்லையில் மர்மமான ட்ரோன் ஒன்று பறந்து கொண்டிருந்த நிலையில் அந்த ட்ரோன் சீனாவை சேர்ந்தது என்பது தெரிய வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதியில் சந்தேகத்துக்கு உரிய வகையில் ட்ரோன் பறந்து கொண்டு இருப்பதாக எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அந்த பகுதிக்கு சென்ற எல்லை பாதுகாப்பு படையினர் ட்ரோனை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து கீழே இறங்கினர்.
 
வயல்வெளியில் அந்த ட்ரோன் விழுந்ததை அடுத்து அதை ஆய்வு செய்தபோது அது சீனாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன் என்பது தெரியவந்தது. இது குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
 
ஏற்கனவே பஞ்சாப் எல்லையில் அடிக்கடி பாகிஸ்தான் நாட்டு ட்ரோன்கள் சுற்றிவரும் நிலையில் தற்போது சீனாவின் ட்ரோன் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பு ஏற்படுத்துள்ளது.
 
Edited by Mahendran
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்