தென் துருவத்திற்கு விண்கலத்தை அனுப்புவது சவாலான பணி என்ற நிலையில் இந்தியாவுக்கு பின் சீனாவும் இந்த சாதனையை செய்துள்ளது. இந்த நிலையில் நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கியுள்ள சீன விண்கலம் இரண்டு நாட்கள் ஆய்வில் ஈடுபட்டு அங்குள்ள பாறைகள் மற்றும் மணல் மாதிரிகளை சேகரிக்கும் என்றும் அதன் பிறகு வரும் ஜூன் 25ஆம் தேதி பூமிக்கு திரும்பி வரும் என்றும் கூறப்படுகிறது