பங்குச்சந்தை தொடர் ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

Siva

செவ்வாய், 2 ஜூலை 2024 (11:36 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக தொடர் ஏற்றம் கண்டு வரும் நிலையில் சென்செக்ஸ் 80 ஆயிரத்தை நெருங்கி விட்டதை அடுத்து முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் நேற்று சென்செக்ஸ் நல்ல அளவில் உயர்ந்த நிலையில் இன்றும் சென்செக்ஸ் 125 புள்ளிகள் உயர்ந்து 79 ஆயிரத்து 610 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
 
அதே போல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 43 புள்ளிகள் உயர்ந்து 24, 184 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. தொடர்ச்சியாக பங்கு சந்தை உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் புதிதாக முதலீடு செய்பவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
இன்றைய பங்குச்சந்தையில் ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், ஹிந்துஸ்தான் லீவர் உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாகவும், அதானி போர்ட்,ஆசியன் பெயிண்ட், ஹெச்டிஎஃப்சி வங்கி, இன்போசிஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்