எல்லை மீறும் சீனா… இந்திய - சீனா போர்கள் குறித்த ஒரு பார்வை !

Webdunia
செவ்வாய், 16 ஜூன் 2020 (16:24 IST)
லடாக்எல்லைப் பகுதி தொடர்பாக இந்திய - சீனா இடையே மோதல் இருந்து வரும் நிலையில் இந்திய ராணுவத்தினர் மூவர் பலியானதாகவும் , இந்திய ராணுவ தரப்பு பதிலடி கொடுத்ததில்  சீனா  வீரர்கள் பலியானதாகவும் 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஏற்கனவே கொரோனா என்ற கொடூர தொற்று நோய் உலகளாவிய பெரும் பதற்றத்தையும் உயிர் பயத்தையும் விளைவித்து,எழுபது லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களைப் பாதிக்கச் செய்துள்ளதால் இந்திய உட்பட வளரும் நாடுகளும் ஏற்னவே வளர்ந்துவிட்ட அமெரிக்கா,ஸ்பெயின்,  சீனா போன்ற நாடுகளும் மக்களைக் காப்பாற்றவும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுத்து இயல்பு நிலைக்கு தேசத்தைக் கொண்டு வரவும் வேண்டித்  திணறி வருகின்றன.  இதனால் அனைத்து நாடுகளும் பொருளாதாரத்திலும் மருத்துவ பயன்பாட்டிலும் ஸ்தம்பித்துப் போயுள்ளனர்.

இந்த உலகளாவிய பொருளாதார விழ்ச்சிக்கும் பண வீக்கத்திற்கும், நோய் பாதிபிற்கும்  கொரோனா தொற்று பரவியதாகக் கூறப்படும் சீனா தேசத்தின் மீதுதான் அமெரிக்க, ஜெர்மனி உட்பட அனைத்து நாடுகளும் குற்றம்சாட்டி வரும் அதேவேளையில் இழப்பீடு கேட்கப்போவதாகவும் கூறிவருகின்றன.

இந்த நிலையில், இந்திய – சீன தேசங்களுக்கு இடையே லடாக்கில் தற்போது பதற்றமான சூல்நிலை நிலவி வருகிறது. இதுகுறித்துப் விரிவாகப் பார்ப்போம்.

கடந்த 1834 ஆம் ஆண்டு மேற்குப் பகுதியில் உள்ள  இந்திய சீன எல்லை என்பது லடாக்கை கீக்கிய கூட்டமைப்பு கைப்பற்றியதால் உருவானதாக கூறப்படுகிறது. 1842 ஆம் ஆண்டு பெரும்பாலான வட இந்திய அரசுகள் சீக்கிய கூட்டமைப்பிற்கு உட்பட்டு இருந்ததால், சீக்கிய கூட்டமைப்பு தனது எல்லையை உறுதிப்படுத்த வேண்டி அண்டை நாடுகளுடன் கையெழுத்திட்டுக் கொண்டது.

ஆனால், 1846 ஆம் ஆண்டு இந்திய ஆங்கிலேய அரசு சீக்கிய கூட்டமைப்பை தோற்கடித்தனர். அதனால்  லடாக் பகுதியானது ஆங்கிலேயர்களின் அதிகாரத்தின் கீழ் வந்தது.

அப்போது, ஆங்கிலேய அதிகாரிகள் சீன நாட்டு அதிகாரிகளை அழைத்து எல்லை குறித்துப் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் மூலம் இரு முனைகளான காரகோரம் கணவாய் மற்றூம் பாங்காங் ஏரி ஆகிய பகுதிகள்  தெளிவாக வரையறை செய்யப்பட்டன. ஆனால், அக்சய் சீனா என்ற பகுதி மட்டும் ஒழுக்காக வரையறை செய்யப்படவில்லை என்று தெரிகிறது.

சில ஆண்டுகள் கழித்து, 1856 ஆன் ஆண்டு, அப்போதைய காஷ்மீர் மகாராஜா, ஆங்கிலேய நில ஆய்வாளர் ஜான்சரை அழைத்து அக்சய் சீன பகுதியை அளவிடுமாறு கேட்டுகொண்டார்.

அதன்பின் சீனப் பகுதி காஷ்மீரின் எல்லைக்குள் உள்ளதாக ஜான்சன் கோடு என்ற எல்லைப் பகுதியை வரையறுத்தார். ஆனால் இதை சீன அரசு நிராகரித்தது. அதேசமயம் இந்திய ஆங்கிலேய அரசிற்கும் இதுகுறித்து சந்தேகம் நிலவியதாகத் தெரிகிறது.  இதுகுறித்து தகுந்த பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதற்கு முன் கடந்த 1892 ஆம் ஆண்டு சீன அரசு காரகோரம் என்ற கணவாய் பகுதியில் தனது எல்லைக் கல்களை நட்டியது. இந்த எல்லைக் கல்லானது லடாக்கிற்கும் ஜின்யாங்கிற்கும்  இருந்த பழைய வழியை ஒட்டி நடப்பட்டதாகத் தெரிகிறது.

சீன அரசின் இந்த அவசரப் போக்கை அப்போதைய ஆங்கில அரசுக்குப் பிடிக்கவில்லை. குறிப்பாக அன்று 19 ஆம் நூற்றாண்டின் பெரும் பகுதியில் விரிந்திருந்த் மத்திய ஆசியாவை யார் வசப்படுத்துவது என்று சூரியன் அஸ்தமிக்காத ராஜ்ஜியம் என்ற பெருமை கொண்ட பிரிட்டனுக்கும், ஐக்கிய சோவியத் யூனியன் என்று பெரும் நிலப்பரப்புகளைக் கொண்டிருந்ந்த ரஷ்யாவுக்கும் அதிகப் போட்டியிருந்தது.

எனவே, ஆங்கிலேய அரசு அக்சய்  சீன பகுதியைச் சீனாவுக்கு கொடுஹ்ட்து ரஷ்யாவின் ஆதிக்கம்தனது எல்லைப் பகுதிக்கு வராமல் செய்ய முயன்றது.

இதனையடுத்து லடாக்கின் எல்லைப்  பகுதிக்கு மெக்கார்டி – மெக்டோனல்ட் கோடு என்று அழைக்கப்பட்டது. பின்னர், சீனாவில் 1911 ஆம் ஆண்டு சின்காய் புரட்சி ஏற்பட்டு, அங்கு அரசியலிலும் ஆட்க்சியிலும் அதிரடியான மாற்றங்கள் ஏற்பட தொடக்கியது. அதேபோல்  1917 ஆம் ஆண்டு ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி ஏற்பட்டு அங்கு சோஷலிச புரட்சி ஏற்பட்டு மாவீரர் லெனின் தலைமையில் சோசலிய ஆட்சி ஏற்படக் காரணமானது.

அந்தநேரத்தில் , ஆங்கிலேய அரசு, அக்சய் சீன பகுதியை சீனா வைத்திருப்பது எந்த விதத்திலும் நியாமில்லை என்று நினைத்து மீண்டும்  நில ஆய்வாளர் ஜான்சன் வரையறுத்தது போல் காஷ்மீர்க்குச் சார்ந்ந்தது அக்சய் எல்லைப் பகுதி என மாற்றப்பட்டது. மேலும் பிரிட்டான் அரசின் உத்தரவின்படி அப்போதைய அரசியல் நிலவரத்திற்கேற்ப  11 விதமான எல்லைகள் வரையறுக்கப்பட்டதாக நெவில் மேக்ஸ் வெல் என்ற செய்தியாளர் தகவல்  தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து இந்தியா 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தபோது, ஜான்சன் கோடி அடிப்படையில் மேற்கு பகுதியின் எல்லை நிர்ணயிக்கப்பட்டது. பின், 1954 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நேரு இந்த எல்லை உறுதிபட அதிகாரப்பூர்வமான தெரிவித்தார். மேலும் லடாக் பகுதியில் பல நூற்றாண்டுகளாகவே அக்சன் சீன் பகுதி உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், 1956 – 1957 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் அக்சய் சீன் பகுதியின் வழியாக ஜின் ஜியாங்கையும் திபெத்தையும் இணைக்கின்ற சாலையை சீனா கட்டியது. சீன வரைபடத்தில் இதுகுறித்த தகவலை காண்பிக்கும் வரை இந்தியாவுக்கு இதுகுறித்து தகவல் தெரியவில்லை.

இந்நிலையில், அக்சய் சீன் பகுதி இந்தியவுக்கே சொந்தம் என்று முன்னாள் பாரத பிரதமர் நேரு அறிக்கை விட்டார். ஆனால், அதற்கு அப்போதைய சீன தலைவரான மாவோவின் ஆதரவாளரும் மிதவாதியுமான சீன அதிபர் சோ என்லாய் இந்திய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு சீன அரசு உரிமை கோராது என்று பகிரங்கமாகத் தெரிவித்தார். அதேசமயம் தான் முன்னர் பேசியபடி அக்சய் சீன் பகுதி சீனாவின் முழுக்கட்டுப்பாட்டில் உள்ளதால் நான் முன்னர் பேசியவைகளும் மிகச் சரியே என்று, அப்பகுதியை  இந்திய பகுதியெனத் தான் கருதவில்லை எனவும்   அவர் தெரிவித்தார்.

அதன்பின் சீனா ராணுவன் இந்தியாவின் அருணாசலப்பிரதேசத்தில் உள்ள தாவாங் பகுதியில்  ஊடுருவியது. இதையத்து, சீனாவுக்கும் இந்தியாவுக்கும் 1959 ஆண்டு தொடக்கத்தில் லடாக்கில்  மோதல்கள் எழுந்து  வந்ததால் பிரச்ச்னைகள் பூதாகரம் ஆனது.  இரு தேசங்களுக்கும் இடையே போர் மூளும் அபயாம் ஏற்பட்டத்தைத் தொடர்ந்து,  1962 ஆம் ஆண்டு இந்தியா மீது சீனா போர் தொடுத்தது.

இந்தியாவின் மீது சீனா போர் தொடுக்க முக்கிய காரணமாகக் கருதப்படுவது,  அக்‌ஷய் சீன் பகுதி என்ற லடாக் எல்லைப் பகுதியாக இருந்தாலும்கூட,  1950 ஆம் ஆண்டு திபெத் தங்கள் நாடு என்று கூறிக் கொண்டு அங்கு அத்துமீறி நுழைந்த சீனா ராணுவம் அதைத் தங்கள் நாடு என்று ஆக்கரமித்துக் கொண்டது.

அதனைத் தொடந்து 1959 ஆம் ஆண்டு திபெத் கிளர்ச்சி தோல்வியில் முடிந்ததை அடுத்து, அப்போதைய தலாய்லாமா இந்தியாவில் அடைக்கம் ஆனார்.  திபெத் கிளர்ச்சிக்குக் காரணமானவர்களுக்கும் திபெத்தியர்களுக்கும் இந்தியா அடைக்கலம் கொடுக்கிறது என்று சீனா இந்தியாவின் மீது கோபம் கொண்டதும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
மேலும், இந்திய – சீனப் போருக்கு முன் இந்திய பிரதமர் நேரு சீனாதேசத்திற்கு அந்த நாட்டின் தலைவர் மாவோ அழைத்ததின் பேரில் சென்றார். அப்போது, சில நாட்கள் நட்பின் பொருட்டும் , இருதேசங்களுக்கு இடையே ஆன பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட பின் நேரு அங்கிலிருந்து விடைபெறும்போது, ’’ஒருவரை புதிதாய் பரீட்சையம் செய்து கொள்கிறபோது ஏற்படும் மகிழ்ச்சி அளவில்லாது: ஆனால் , பழகியவர்களை விட்டுப் பிரிகின்றபோது ஏற்படும் தூயரத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது’’ என்று தெரிவித்து மாவோவுக்கும் தனக்குமான நட்பை வெளிப்படுத்தினார் பிரதமர் ஜவஹர்லால் நேரு.

அதபின்னர் கடந்த 1962 ஆம் ஆண்டு  சீனா இந்தியாவுக்கு இடையே  தெற்கு சியான் சின் ) அக்‌ஷய் சின் பகுதியில் நடைபெற்ற போரில் சீனா வெற்றி பெற்றது.

சீனா இந்தியாவின் மீது போர் தொடுக்காது என்று நம்பியிருந்த நேரத்தில் சீனதலைவர் மாவோ மற்றும் அப்போதைய சீன தலைவர்களின் உத்தரவின்பேரில் இந்தியாவை எதிர்த்து சீனா ராணுவம் களமிறங்கினர்.

இந்தியாவின் தோல்வி பிரதமர் நேருக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்ததுடன் இந்த துயகரமான சம்பவமே அவரது உடல் நிலை சீர்குலையவும் காரணமாக அமைந்ததாக கவியரசு கண்ணதாசன் தனது சுயசரிதமான மனவாசத்தில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, இந்தியாவின் எல்லைப்பகுதியில் அடிக்கடி வாலாட்டி தலையாட்டி வரும் சீனாவுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுப்பது இரண்டாவது இருக்கட்டும் ! இதுபோல் எதிர்காலத்தில் சிக்கலான பிரச்சனைகளும் உயிரிழப்புகளும் போர்களும் வராமல் தற்போதைய ஆட்சியில் உயர் பதவியில் இருப்போர் இதுகுறித்து  சீன அதிபருடனும் அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதுதான் லடாக்கில் பதற்றமான சூழ்நிலையில் உள்ள மக்களின் வேண்டுகோளாக இருக்கும் என்பது மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களின் வேண்டுகோளும் அமைதியா முறையில் இருநாட்டு உறவுகளும் அமைய வேண்டும் என்பதுதான்.

ஏனென்றால் ஆயுதங்கள் தாங்கி போரிடுவது என்பது எப்போதும் அமைதிக்குத் தீர்வாக அமையாது. அதேவேளை சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்று இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தும்போது, இந்தியாவும் தக்க பதிலடி கொடுக்கத் தயங்காது என்பதே உண்மை.  

ஏனெனில் 1962 ல் இருந்த இந்தியா வேறு! இப்போது உலக நாடுகளிடையே செல்வாக்குப் பெற்றுத் திகழும் அனைத்து துறைகளிலும் தொழில்நுட்பங்களிலும் முன்னேறி வருகிற நவீன இந்தியா வேறு என்பதை சீனாவும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே அனைவரது விரும்பம்.

சினோஜ்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்