லடாக் தாக்குதலில் 5 சீன வீரர்கள் பலியா? சீன ஊடக செய்தியால் பரபரப்பு

செவ்வாய், 16 ஜூன் 2020 (14:48 IST)
லடாக் தாக்குதலில் 5 சீன வீரர்கள் பலியா?
நேற்றிரவு லடாக் பகுதியில் இந்தியா மற்றும் சீனா துருப்புகளுக்கு இடையே நடந்த மோதலில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிலும் வீரமரணம் அடைந்தவர்களில் ஒருவர் இராணுவ அதிகாரி என்பதும் இன்னொருவர் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது
 
இந்த நிலையில் 1975 ஆம் ஆண்டுக்கு பின்னர் 45 ஆண்டுகளுக்குப் பின் நடந்த இந்த மோதலில் இந்திய தரப்பில் 3 வீரர்கள் பலியானது மட்டுமின்றி சீன ராணுவ வீரர்கள் 5 பேர்கள் பலியானதாகவும், 11 பேர் காயம் அடைந்ததகவும் சீன ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது
 
மேலும் இந்தியா தான் முதலில் எல்லை தாண்டி தாக்குதல் நடத்தியதாகவும், அதன்பின்னரே சீன ராணுவம் பதிலடி கொடுத்ததாகவும் அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் இருநாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
மேலும் இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை கூறியபோது, ‘இந்த சண்டையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயற்சி செய்து வருவதாகவும், அமைதி பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே இந்த பிரச்சனையை தீர்க்க முடியும் என்றும் இந்தியாவும் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்கும் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்