இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை கூறியபோது, ‘இந்த சண்டையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயற்சி செய்து வருவதாகவும், அமைதி பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே இந்த பிரச்சனையை தீர்க்க முடியும் என்றும் இந்தியாவும் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்கும் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அதோடு சீனா ஒரு வேண்டுகோளையும் முன்வைத்துள்ளது, அதில் லடாக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியா தன்னிச்சையாக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். இந்திய ராணுவத்தினர் 3 பேர் வீர மரணம் அடைந்துள்ள நிலையில் இந்தியா பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் செயல்பட வேண்டாம் என கோரியுள்ளது.