மக்களுக்கு வந்த ’டேட்டா’ சோதனை : ’ ரேட்டை உயர்த்திய ’நெட்வொர்க்’ கம்பெனிகள் ’

Webdunia
செவ்வாய், 3 டிசம்பர் 2019 (17:44 IST)
பல்லாயிரம் கோடி பெரும் கடனில் சிக்கி தவித்து வந்த நாட்டின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்கள் இனி தங்களால் இந்தக் கடன்  சுமையைத் தாங்க முடியாது என ஒரு வழியாக கட்டண உயர்வை அறிவித்துள்ளனர். இதனால் இனி பாதிக்கப்படுவது மக்கள்தான். 
ஏனென்றால் உலகிலே குறைந்த கட்டணத்தில் டேட்டாக்களைப் பயன்படுத்தி வந்த இந்தியர்கள் இனி தொலைதொடர்பு நிறுவங்கள் விதித்துள்ள கட்டணத்துக்கு சம்மதித்துதான் ஆக வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
 
நாட்டில் முன்னணி தொலைத் தொடர்ப்பு நிறுவங்களாக ஏர்டெல், வோடபோன், மற்றும் பெருமளவு வாடிக்கையாளர்களை, கொண்டுள்ள ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவங்கள், வரும் 6 ஆம் தேதி முதல் தங்களின் கட்டண உயர்வை அமல்படுத்த உள்ளன. இந்தக் கட்டண உயர்வானது, 5 ஆண்டுகளுக்குப் பிறகு தொலைத் தொடர்பு நிறுவனங்களால் அமல்படுத்தப்படுவதாகவும் தகவல் வெளியாகிறது.
 
ஒருவேளை, இந்தக் கட்டணம் அமலுக்கு வந்தால், நாட்டிலுள்ள ஏழைமக்களின் மாதாந்திர பட்ஜெட்டில் துண்டி விழலாம் எனவும் அதனால் தற்போது நெட்கார்டு போட்டு சமூக வலைதளங்கள் மற்றும் யூடுயூப்  பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையலாம் எனவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தற்போது, ஏர்டெல், வோடபோன், ஜியோ, ஆகிய முன்னணி நிறுவங்களில் உள்ள மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மட்டும் 900 மில்லியன் இருப்பதாகவும், இந்தக் கட்டண உயர்வினால் இந்த எண்ணிக்கையில் பெரும் வித்தியாசம் ஏற்படலாம் என இத்துறையைச் சேர்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
 
ஆனால், இந்தக் கட்டண உயர்வு குறித்து ரிலையன்ஸ் ஜியோ தரப்பில்,  இது தொலைதொடர்புத் துறையில் தங்களை நிலையாக இருக்க  உதவும் என தெரிவித்துள்ளது.
 
தற்போது தொலை தொடர்பு நிறுவங்கள் அறிவித்துள்ள புதிய கட்டணங்கள் குறித்துக் காணலாம்.
 
ஏர்டெல், அறிவித்துள்ள கட்டண விவரம் :
 
இந்த புதிய கட்டணத்தின் படி மாதம் தோறும் ரீசார்ஜ் ரூ. 35 என்ற அளவில் இருந்து, ரூ.49 என்ற விதிக்கப்பட்டுள்ளது.
 
28 நாட்கள் வேலிடிட்டி உடைய பேக்கேஜ்  : பழைய கட்டணம் ரூ.249 , புதிய கட்டணம் ரூ. 298
82 நாட்கள் வேலிடிட்டி உடைய பேக்கேஜ்  : பழைய கட்டணம் ரூ. 448, புதிய கட்டணம் ரு.598
வோடபோன் - ஐடியா அறிவித்துள்ள புதிய கட்டண விவரம் :
 
84 நாட்கள் வேலிடிட்டி உடைய பேக்கேஜ் : பழைய கட்டணம் ரூ.569 தற்போதய புதிய கட்டணம் ரூ.669 ஆகவும்,
 
ஒரு வருடத்துக்கு அதாவது 365 நாட்களுக்கு ஆன பழைய கட்டஅம் ரூ.1699, புதிய கட்டணம் ரூ. 2399 ஆக உயர்ந்துள்ளது.
 
மேலும், இந்தப் புதிய கட்டண உயர்வின் மூலம் ஏர்டெல் நிறுவனத்துக்கு வருவாயாக  ரூ7 ஆயிரம் கோடியும்,   வோடபோன் நிறுவனத்துக்கு வருவாயாக  ரூ.6 ஆயிரம் கோடியும் கிடைக்க வாய்ப்புண்டு என செய்திகள் வெளியாகிறது.
 
இந்தக் கட்டண உயர்வால் மக்கள் தலைமேல் கை வைத்து  மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஜியோ :
இந்தியாவில் தொலைத்தொடர்பு புரட்சி ஏற்படுத்திய ஜியோவின் புதிய கட்டணம் எப்படி இருக்குமோ என அதன் வாடிக்கையாளர்கள் புலம்ப ஆரம்பித்துவிட்டனர்.
 
ஜியோவின் புதிய கட்டண உயர்வு வரும் டிசம்பர் 6 ஆம் தேதி அந்நிறுவனத்தால் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்