ஏர்டெல், வோடஃபோன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு Bad news..

Arun Prasath

திங்கள், 2 டிசம்பர் 2019 (09:37 IST)
ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் சேவை கட்டணத்தை 42 % உயர்த்தியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ வருகைக்கு பிறகு ஏர்டெல், வோடஃபோன் வாடிக்கையாளர்கள் பலர் ஜியோவிற்கு தாவினர். இதனால் ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் பெரும் சரிவை சந்தித்தன.

அதன் பின்பு ஜியோக்கு நிகரான திட்டங்களை அமல்படுத்தி, தனது வாடிக்கையாளர்களை ஓரளவு திருப்திப்படுத்தியது. இந்நிலையில் நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறி வந்த ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள், சேவை கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியுள்ளன.

அதன் படி, ஏர்டெல்லின் டேட்டா மற்றும் அன்லிமிட்டட் கால் திட்டத்தில் 28 நாட்களுக்கான ரூ.129 கட்டணம் 148 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும் 1699 ரூபாயிலிருந்த ஓராண்டிற்கான கட்டணம் 2,398 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது.

இதே போல் வோடஃபோனின் டேட்டே மற்றும் அன்லிமிட்டட் கால் திட்டத்தில் 28 நாட்களுக்கான ரூ.179 கட்டணம் 299 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும் 1699 ரூபாயிலிருந்த ஓராண்டு கட்டணம் 2399 ரூபாயாக உயர்ந்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்