18 வயதானால் தானாகவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேரும்.. மத்திய அரசு

Webdunia
திங்கள், 28 நவம்பர் 2022 (11:22 IST)
வாக்காளர் அடையாள அட்டை உள்பட அனைத்து ஆவணங்களையும் பெறுவதற்கு இனிமேல் பிறப்பு சான்றிதழ் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது என்பது தெரிந்ததே. 
 
இதற்கு சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. பிறப்பு சான்றிதழ் கட்டாயமாக்கினால் தான் 18 வயது ஆகும் போது ஒரு நபரின் பெயர் தானாகவே வாக்காளர் பட்டியலில் சேர்ந்து விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
அதே போல் ஒருவர் இறந்து விட்டால் அவரது பெயரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீங்கிவிடும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கவும் பிறப்பு இறப்பு சான்றிதழ் அவசியம் கேட்கப்படுகிறது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது
 
ஆனால் இந்த விளக்கத்தை எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்