வெளிநாட்டு வாகனங்களில் பயணிகள் ஏற்ற தடை! – மத்திய அரசு அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (09:24 IST)
வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் இந்தியாவில் பயணிகளை ஏற்றி செல்ல அனுமதி கிடையாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு கார் டாக்சி சேவைகள் செயல்பட்டு வருகின்றன. உயர்ரக வாகனங்கள் பல வெளிநாடுகள் பதிவு செய்யப்பட்டு இந்தியாவில் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான வாகனங்கள் இந்தியாவிற்கு பயணிகளை ஏற்றி செல்லும் கமர்சியல் சேவைகளுக்கு அனுமதிக்கப்படுவதில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த வாகனங்கள் இந்திய அரசின் வாகனங்கள், மோட்டார் வாகன சட்டத்தை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும், உரிய ஆர்சி புத்தகம், ஓட்டுனர் உரிமம், சர்வதேச ஓட்டுனர் அனுமதி, காப்பீடு ஆகியவற்றை பெற்றிருத்தல் வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்