செக் பவுன்ஸ்: 2 ஆண்டு சிறை, அபராதம்; பாடாய் படுத்தும் மத்திய அரசு!

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2016 (17:07 IST)
காசோலை மூலம் மோசடி செய்பவர்களுக்கு தண்டனை அளிக்க வழிகள் உண்டு என்றாலும், அந்த தண்டனைகள் குறைவாகவே உள்ளன. 


 
 
நாடு முழுவதும் பணமில்லா பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு  காசோலை மோசடியில் ஈடுபடக் கூடும் என்பதால், செக் பவுன்ஸ் ஆவதற்கான தண்டனையை அதிகப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
 
இதன்படி செக் மோசடியில் ஈடுபடுவோருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை அல்லது பவுன்ஸ் ஆன காசோலையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொகையில் இரு மடங்கு அபராதமாக இருக்கும் வகையில் தண்டனைகள் அதிகரிக்கப்படும் என தெரிகிறது.
 
இதுவரை சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட செக் மோசடி வழக்கு இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்