தடுப்பூசி போட்டுக்கிட்டா விமான பயணத்தில் சலுகை! – மத்திய அரசு ஆலோசனை!

Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (11:25 IST)
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் உள்நாட்டு விமான பயணங்களுக்கு தளர்வு அளிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் உலக நாடுகள் பல மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அமெரிக்காவில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு பீர் இலவசமாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தியாவில் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு உள்நாட்டு விமான பயணத்தில் தளர்வுகள் வழங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது விமான நிலையங்களில் பயணம் மேற்கொள்ள கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக உள்ள நிலையில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு நெகட்டிவ் சான்று தேவையில்லை என அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாநில அரசுகளுடன் ஆலோசித்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிடும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்