காவிரி விவகாரம் - மேலும் 2 வார கால அவகாசம் கேட்டு மத்திய அரசு மனு

Webdunia
வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (11:48 IST)
காவிரி மேலாண்மை வாரியம் வரைவுத் திட்டத்தை சமர்பிக்க மேலும் 2 வாரக் கால அவகாசம் கேட்டு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. இதனையடுத்து தமிழக அரசு, மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடந்தது. கர்நாடகாவில் சட்ட பேரவைத் தேர்தல் நடைபெறப் போவதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாத கால அவகாசம் கேட்டும், ஸ்கீம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கேட்டும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. 
இந்த வழக்கானது கடந்த 9 ந் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. காவிரி விவகாரத்தில் மத்திய அரசு, வரைவு திட்ட அறிக்கையை மே 3ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில்  வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய மேலும் இரண்டு வார  கால அவகாசம் வேண்டும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தற்பொழுது மனு அளித்திருக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை தமிழக மக்களை கொந்தளிப்பு அடையச் செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்