பாலம் இடிந்து விழுந்து விபத்து - 18 பேர் பலி

Webdunia
புதன், 16 மே 2018 (08:14 IST)
உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசியில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசியில் உள்ள ராணுவ கண்டோன்மன்ட் பகுதியில்  ஒரு மேம்பாலம் கட்டப்பட்டு வந்தது. மேம்பாலக் கட்டுமானப் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். 
 
இந்நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் அந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. பாலத்தின் கீழ் பகுதியில் இருந்த பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கி கொண்டன. 
 
இந்த கோர விபத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 16 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
 
விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் இடிபாடுகளில் சிக்கி இருந்த 50 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்திற்கு உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு  தலா 2 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்