வாக்களிக்க சென்ற போது விபத்தில் சிக்கி 4 பேர் பரிதாப பலி

ஞாயிறு, 13 மே 2018 (11:44 IST)
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க சென்றவர்கள் வெவ்வேறு விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
ஹாசன் மாவட்டம் பேளூர் தாலுகா மகேஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் 9 பேர் ஆட்டோவில் வாக்களிப்பதற்காக வாக்குச்சாவடிக்கு சென்று கொண்டு இருந்தனர். அப்போது எதிரே வந்த லாரி, ஆட்டோ மீது மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலே பலியானார்கள். மீதமுள்ளவர்கள் மருத்த்வமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
அதேபோல் ஒலேநரசிப்புராவை சேர்ந்த ராஜு என்பவர் வாக்களித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்த போது, அவரது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர மரத்தில் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
வாக்களிக்க சென்றவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்