மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

Siva

வெள்ளி, 17 மே 2024 (08:10 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருவதை அடுத்து மின் தேவை குறைந்துள்ளது என மின்சார துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நேற்றைய மின் தேவை 17,331 மெகாவாட் அளவுக்கு இருந்தது என்றும் கடந்த மார்ச் 20ம் தேதி மிக அதிகமாக 19,387 மெகாவாட்டாக மின் தேவை இருந்தது என்றும் அன்றைய தினம் மின் நுகர்வும் 42.37 கோடி யூனிட் என்றும் மின் துறை தெரிவித்துள்ளது.

மேலும் 2 ஆயிரம் மெகாவாட் மின் தேவையும், ஒரு கோடி யூனிட் மின் நுகர்வும் தற்போது குறைந்துள்ளது எனவும், வீடு, தொழிற்சாலை உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் தினசரி மின் நுகர்வு 30 கோடி யூனிட்டாக உள்ளது எனவும் மின்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கோடை வெயில் காரணமாக மின் நுகர்வானது 40 கோடி யூனிட்டை தாண்டிய நிலையில் தற்போது 1 கோடி யூனிட் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அடுத்தடுத்து மின் தேவை குறைய வாய்ப்பிருப்பதாகவும் மின் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் மின் துறை தெரிவித்துள்ளது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்