போராட்டக்காரர்களிடமிருந்து ஹெலிகாப்டரில் எஸ்கேப் ஆன பாஜக அமைச்சர்..

Arun Prasath
திங்கள், 30 டிசம்பர் 2019 (17:26 IST)
போராட்டக்காரர்களுக்கு பயந்து ஹெலிகாப்டரில் சென்று எம்.எல்.ஏ உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார் பாஜக அமைச்சர்

அசாம் மாநிலத்தில் பாஜக ஆட்சியிலிருக்கும் நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதன் தொடர்சியாக அசாம் மாநிலத்தின் தேஜஸ்பூர்-கோரமாரி தேசிய நெடுஞ்சாலையில் அசாம் மாணவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் உடல் நலக்குறைவால் மரணமடைந்த பாஜக எம்.எல்.ஏ ராஜன் போர்தாக்கூரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவத்ற்காக அக்கட்சியை சேர்ந்த அசாம் மாநில நிதியமைச்சர் ஹிமாந்தா பிஸ்வாசர்மா சென்றார்.

போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஹிமாந்தா 5 கீ.மீ. தூரத்துக்காக ஹெலிகாப்டரில் சென்று எம்.எல்.ஏ.க்கு அஞ்சலி செலுத்தினார். பின்பு அஞ்சலி செலுத்திவிட்டு பலத்த பாதுகாப்புடன் கவுகாத்தி திரும்பினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்