பாஜக பிரமுகர் ஒருவர் பெண் நண்பரின் வீட்டில் இருந்து குதித்து காயம் அடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் ஆறு ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்
அரியானா மாநில பாஜகவின் முக்கிய பொறுப்பில் உள்ளவர் சந்தர் பிரகாஷ். இவர் கடந்த 21ஆம் தேதி தனது பெண் நண்பர் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது. இதனை அடுத்து அவர் வீட்டிலிருந்து வெளியேறுவதற்காக இரண்டாவது மாடியில் இருந்து பால்கனி வழியாக துணியை கட்டிக் கொண்டு கீழே குதித்தார். ஆனால் துணிகளையும் மீறி அவர் இடது காலில் காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் அந்தப் பகுதி மக்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையிலும் சந்தர்பிரகாசை ஆறு ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்து அரியானா மாநில பாஜக தலைமை அறிவித்துள்ளது. இதனால் அரியானாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது