சீனாவுடனான போருக்கு மோடி தேதி குறித்துவிட்டார்… பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை!

Webdunia
திங்கள், 26 அக்டோபர் 2020 (13:56 IST)
இந்திய சீனா எல்லையில் கடந்த சில மாதங்களாக பதற்றமான சூழல் நிலவி வருவதால் இரு நாட்டு ராணுவங்களும் எல்லையில் வீரர்களைக் குவித்து வைத்துள்ளனர்.

இந்திய சீனா எல்லையான லடாக் பகுதியில் கடந்த சில மாதங்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இரு நாட்டு ராணுவமும் அங்கே வீரர்களை குவித்துள்ளது. இந்நிலையில் உத்தர பிரதேச பாஜக தலைவர் பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் பேசிய பேச்சு ஒன்று இப்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அவரது பேச்சில் ‘அரசியலமைப்புச் சட்டம் 370-வது பிரிவு ரத்து, ராமர் கோயில் கட்டுவது என அனைத்துக்கும் தேதி குறிக்கப்பட்டது. அதுபோலவே சீனா மற்றும் பாகிஸ்தானுடன் எப்போது போர் தொடங்கவேண்டும் என்பது குறித்துக்கூட பிரதமர் மோடி தேதி குறித்து விட்டார்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்