தெலுங்கானா மாநிலத்தில் பெண் அமைச்சரை தரக்குறைவாக பேசிய பாஜக பிரமுகர் சி.டி. ரவி நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு உடனடியாக ஜாமீன் கிடைத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் என்பவருக்கு எதிராக பாஜக பொதுச்செயலாளர் சி.டி. ரவி தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்ததாக தெரிகிறது. இதனை அடுத்து, அமைச்சரின் புகாரின் அடிப்படையில் சி.டி. ரவி மீது மூன்று பிரிவுகளிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனை அடுத்து, கைது செய்ய வந்த போலீசாருக்கு ஒத்துழைக்காததால், அவரை சட்டசபை வளாகத்தில் இருந்து குண்டு கட்டாக தூக்கி போலீசார் கைது செய்தனர்.
இந்த கைது குறித்து கருத்து தெரிவித்த சி.டி. ரவி, தன்னை காங்கிரஸ் அரசு கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், போலீஸ் காவலில் சித்திரவதைக்கு உள்ளானதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சி.டி. ரவியின் ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில், கர்நாடக உயர்நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. இதனை அடுத்து, சிறையில் இருந்து வெளியே வந்த அவர், சிறையில் தன்னை காவல்துறையினர் தீவிரவாதி போல் நடத்தியதாக குற்றச்சாட்டு கூறியுள்ளார்.