பொய்யை நம்பி ஓட்டு: மக்களை முட்டாள் ஆக்கும் மோடி அரசு

Webdunia
புதன், 10 அக்டோபர் 2018 (18:20 IST)
பாஜக கடந்த தேர்தலின் போது பல வாக்குறுதிகளை முன் வைத்து ஓட்டு கேட்டு ஆட்சியை பிடித்துள்ளது. அனால், இந்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றியதாக தெரியவில்லை. ஆனால், மக்கள் முட்டாள் ஆக்கப்படுகிறார்கள் என்பது மட்டும் உறுதி ஆகியுள்ளது. 
 
ஆம், சமீபத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் இவர் பேசியது தற்போது தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
நிதின் கட்காரி, நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என எதிர்ப்பார்க்கவில்லை. அதனாலேயே நாங்கள் பெரிய வாக்குறுதிகளை அளித்தோம். ஆனால் இப்போது நாங்கள் ஆட்சிக்கு வந்து விட்டோம். 
 
ஆனால், நாங்கள் அளித்த வாக்குறுதிகளை மக்கள் நினைவில் வைத்துள்ளார்கள். அதனால்தான் நாங்கள் அதுபற்றி கேட்டால் சிரித்து விட்டு, நகர்ந்து விடுகிறோம் என்று கூறியுள்ளார். இவரது இந்த பேச்சு சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. 
 
மோடி அரசு, கருப்பு பணம் ஒழிக்கபப்டும், ஸ்விஸ் வங்கியில் இருந்து கருப்பு பணம் மீடகப்பட்டு மக்களின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் போடப்படும் என அனைத்து வாக்குறுதிகளும் தண்ணீரில் எழுதிவைத்தது போல ஆகிவிட்டது. 
 
இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, போலி வாக்குறுதிகளை கொடுத்து பாஜக தேர்தலில் வெற்றி பெற்றது அம்பலமாகியுள்ளது. இனி மக்கள் பாஜகவை நம்ப மாட்டார்கள் என நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்