சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு பிறப்புச் சான்றிதழ் கட்டாயம்!

Webdunia
வெள்ளி, 5 ஜனவரி 2018 (11:14 IST)
சபரிமலைக்கு தரிசனம் செய்ய செல்லும் பெண்கள் இனி கட்டாயம் பிறப்புச் சான்றிதழை உடன் எடுத்து செல்ல வேண்டும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உலக பிரசக்தி பெற்ற ஐய்யப்பன் கோவிலுக்கு, ஆண்டு தோறும் நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு வருவது வழக்கம். இதனால் ஆண்டின இறுதி மாதங்களான நவம்பர், டிசம்பர் மாத சமயங்களில் ஐய்யப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் சிலர் தவறான வயதை கூறி கோயிலுக்குள் நுழைய முயற்சிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் இதனைத் தடுக்க பிறப்புச் சான்றிதழ் அடிப்படையில் பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. எனவே இனி 1-10 வயது மற்றும் 50 வயதுக்கு மேலுள்ள பெண்கள், சபரிமலைக்கு வரும் பட்சத்தில் பிறப்புச் சான்றிதழை உடன் வைத்திருந்த்தால் தான் சுவாமி தரிசனம் செய்ய முடியும்.  இந்த முடிவு வரும் ஆண்டு முதல் அம்லுக்கு வர உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்