2022ஆம் ஆண்டு அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவு வகைகளில் பிரியாணி முதலிடத்தில் இருப்பதாக ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனம் ஸ்விக்கி தெரிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டில் மட்டும் சராசரியாக ஒரு நாளுக்கு 2 பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும் ஒரு நிமிடத்திற்கு 137 பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும் ஸ்விக்கி தெரிவித்துள்ளது
மேலும் பிரியாணியை அடுத்து மசாலா தோசை, சமோசா, குலோப்ஜான், பாப்கான் ஆகியவை அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவு வகைகள் என ஸ்விக்கி தெரிவித்துள்ளது
இந்த பட்டியலில் இருந்து இந்தியாவின் விருப்பத்திற்கு உரிய உணவு பிரியாணி என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.