நீங்கள் கன்னித்தன்மை உடையவரா என்ற கேள்விக்கு அமைச்சர் கொடுத்த பலே விளக்கம்

Webdunia
வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (14:35 IST)
பீகார் மாநிலத்தில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் கல்லூரியில் பணி நியமனத்துக்கான உறுதிமொழி படிவத்தில் கேட்கபட்ட சர்ச்சை கேள்விக்கு அமைச்சர் புத்திசாலிதனமாக பதில் அளித்துள்ளார்.


 

 
பீகார் மாநிலத்தில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் கல்லூரியில் பணி நியமனத்துக்கான உறுதிமொழி படிவத்தில் சில வினோதமான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் நீங்கள் திருமணமாகதவரா? மனைவியை இழந்தவரா? விர்ஜினா? என்று கேட்கப்பட்டுள்ளது.
 
நீங்கள் கன்னியா? இல்லையா? என கேட்டுள்ளனர். இந்த கேள்வி தேவையா? என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கேலி செய்து வருகின்றனர். இதற்கு பீகார் மாநிலம் சுகாதாரத் துறை அமைச்சர் மங்கல் பாண்டே அருமையான விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.
 
அவர், விர்ஜின் என்றால் திருமணமாகாத பெண் என்று கூறியுள்ளார். இதுகுறித்து இவர் அளித்துள்ள விளக்கம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புத்திசாலிதனமாக சமாளிக்க நினைத்து பல்பு வாங்கிவிட்டார். மேலும் எத்தனை மனைவிகள்? என்ற சர்ச்சை கேள்வியும் கேட்கப்பட்டுள்ளது.


 
தற்போதுவரை இதுகுறித்து பீகார் மாநில அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை. பாஜக தலைமையிலான நிதிஷ்குமார் அரசு மௌனம் காத்து வருகிறது. 
 
இதுகுறித்து கல்வி நிறுவனத்தின் மருத்துவக் கண்காணிப்பாளர் மனீஷ் மண்டல் கூறியதாவது:-
 
நாங்கள் எய்ம்ஸ் கல்வி நிறுவனத்தின் விதிமுறைகளை தான் பின்பற்றுகிறோம். அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளபடிதான் இந்த வார்த்தைகள் உள்ளன். அவர்கள் மாற்றினால் நாங்களும் மாற்றுவோம் என்றார்.
அடுத்த கட்டுரையில்