பீகார் மாநிலத்தில் ஆண் ஆசிரியருக்கு மகப்பேறு விடுமுறை அளித்த அரசு பள்ளியின் ஸ்கிரீன் ஷாட் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பீகார் மாநிலத்தில் உள்ள வைஷாலி என்ற மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணி செய்யும் ஜிதேந்திர குமார் சிங் என்பவர், குழந்தை பிறப்பு மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்பில் ஒரு வாரம் விடுமுறையில் இருந்துள்ளார். இது குறித்த விண்ணப்பத்தை ஸ்கிரீன் ஷாட்டாக எடுத்து, இணையத்தில் வைரல் செய்து வருகின்றனர்.
ஆன்லைனில் அவர் விடுமுறைக்கு விண்ணப்பித்ததாகவும், அரசு ஆசிரியர்களுக்கு அமைக்கப்பட்ட இணையதளத்தை பயன்படுத்தி எடுக்கப்பட்ட இந்த விடுமுறை குறித்த ஸ்கிரீன் ஷாட்டுகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இது குறித்து கல்வி அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இது ஒரு தொழில்நுட்ப பிழை என்றும், தொழில்நுட்ப பிழை சரி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். ஆண்கள் தங்களுடைய குழந்தைகளை கவனிக்க தந்தையர் விடுப்பு இருக்கிறது என்றாலும், அதை மகப்பேறு விடுப்பாக எடுக்க முடியாது என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
ஆண் ஒருவருக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்ட ஸ்கிரீன் ஷாட்டுகள் இணையத்தில் வைரல் ஆகி உள்ள நிலையில், சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் இதுகுறித்து கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.