பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து 20 பேர் பலி.. 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்..!

Mahendran

வியாழன், 17 அக்டோபர் 2024 (12:07 IST)
பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து 20 பேர் பலியாகி உள்ள நிலையில் ஊராட்சியை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
கள்ளச்சாராய சாவுகள் நாடு முழுவதும் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் காவல்துறையினர் என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் கள்ளச்சாராயம் மீண்டும் மீண்டும் முளைத்துக் கொண்டே இருக்கிறது.
 
மேலும் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து 20 பேர் உயிர் இழந்ததாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
பீகார் மாநிலத்தில் உள்ள சிவன், சரண் aஅகிய இரண்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த பலர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் இதுவரை 20 பேர் உயிரிழந்த நிலையில் இன்னும் சில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.
 
இந்த நிலையில் மாகர் மற்றும் அவுரியாஊராட்சியை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் இது குறித்து வழக்கு பதிவு செய்து கள்ளச்சாராயம் விற்றவரை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்