இறைச்சி சாப்பிடும் ஆண்களிடம் பாலியல் உறவு வேண்டாம்.. செக்ஸ் ஸ்டிரைக்கில் பீட்டா!

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2022 (08:17 IST)
இறைச்சி சாப்பிடும் ஆண்களிடம் பாலியல் உறவு கொள்ள வேண்டாமென செக்ஸ் ஸ்டிரைக் நடத்துமாறு பெண்களுக்கு பீட்டா அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
உலகம் முழுவதும் விலங்குகள் நலனுக்காக அமைக்கப்பட்ட பீட்டா நிறுவனம் விலங்குகளுக்காக குரல் கொடுத்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் உலகம் முழுவதும் இறைச்சிக்காக விலங்குகள் கொல்லப்படுவதை அவ்வப்போது கண்டனம் தெரிவித்து வரும் பீட்டா தற்போது திடீரென இறைச்சி சாப்பிடும் ஆண்களிடம் பாலியல் உறவு கொள்ள வேண்டாமென செக்ஸ் ஸ்டிரைக்  நடத்த பெண்களுக்கு அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது 
 
பெண்களை விட ஆண்கள் அதிக இறைச்சி உணவு சாப்பிட்டு காலநிலை பேரழிவிற்கு வழி செய்கிறார்கள் என்றும் அதனால் இந்த உலகை காப்பாற்ற அனைத்து பெண்களும் செக்ஸ் ஸ்டிரைக் கலந்து கொள்ளவேண்டும் என்றும் சர்வதேச அளவில் பீட்டா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது
 
 இந்த கோரிக்கைக்கு பெண்கள் எந்த அளவுக்கு ஆதரவு தருவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்