வங்கி ஊழியர்களின் போராட்டம்... ஏடிஎம்களில் பணமில்லை ..;.மக்கள் அவதி

Webdunia
திங்கள், 15 மார்ச் 2021 (19:15 IST)
வங்கி ஊழியர்களின் போராட்டத்தால் ஏடிஎம்களில் பணமில்லாத நிலை உருவாகியுள்ளது.

நாட்டில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் ஆட்சி நடைபெற்றுவருகிறது.

சமீபத்தில் மத்திய அமைச்சர் சீதாராமன் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதாக அறிவித்தார். இதற்கு நாடு முழுவதிலும் உள்ள பொதுத்துறைவங்கி ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்ச் 15 மற்றும் 16ல் நடைபெறும் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்திற்கு திமுக ஆதரவு என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று முதல் வங்கி ஊழியர்களின் போராட்டம் தொடங்கியுள்ளது.

இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கும் அரசின் நடவடிக்கைகளை கண்டித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2நாட்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்கள் வங்கிகள் விடுப்பு என்பதால் இ இன்று வங்கிகள் போராட்டத்தி ஈடுபட்டுள்ளதால், மக்கள் மற்றும் வணிகர்கள் அவதிக்குள்ளாகினர். ஏடிஎம்களிலும்பணம் நிரப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
a

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்