ரூ.90 லட்சம் பணத்தை வங்கியில் எடுக்க முடியாத நிலை: மாரடைப்பால் வாடிக்கையாளர் மரணம்

Webdunia
புதன், 16 அக்டோபர் 2019 (07:19 IST)
வங்கியில் பணத்தை போட்டு வைப்பது தான் பாதுகாப்பானது என உலகம் முழுவதும் உள்ள மக்கள் நம்பிக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென வங்கியில் உள்ள பணத்தை எடுப்பதற்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் பல கோடி ரூபாய் மோசடி நடந்தது வெளிச்சத்துக்கு வந்த நிலையில், இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்கள் அவர்களுடைய வ்ங்கிக்கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன 
 
இதனை அடுத்து வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்களுடைய முதலீடுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில் மும்பையில் நேற்று 56 வயது சஞ்சய் குலாட்டி என்பவர் போராட்டத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பினார். அப்போது அவர் தன்னுடைய வங்கிக்கணக்கில் இருக்கும் தன்னுடைய 90 லட்ச ரூபாய் பணத்தை எடுக்க முடியாத நிலையை கண்டு குடும்பத்தினரிடம் அவர் வருத்தமாக கூறியுள்ளார் 
 
இந்த நிலையில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் மரணம் அடைந்தார். இதேபோல் 39 வயது டாக்டர் ஒருவரும் வங்கியில் உள்ள தனது பணத்தை எடுக்க முடியாததால் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்