ஒரு ஆண்டில் 71 ஆயிரம் கோடி மோசடி : ரிசர்வ் வங்கியின் அதிர்ச்சி அறிக்கை!

Webdunia
வியாழன், 26 டிசம்பர் 2019 (14:05 IST)
கடந்த நிதியாண்டில் மட்டும் வங்கிகளில் 71 ஆயிரம் கோடி ரூபாய் பண மோசடி நடந்திருப்பதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2017-18 நிதியாண்டில் நடைபெற்ற மோசடிகளோடு ஒப்படுகையில் 2018-19 நிதியாண்டில் 74 சதவீதம் மோசடிகள் அதிகரித்திருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மோசடி சம்பவங்களும் 15 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2017-18ம் நிதியாண்டில் 5 ஆயிரத்து 916 வங்கி மோசடி சம்பவங்களும், 41 ஆயிரத்து 167 கோடி பண மோசடியும் நடந்துள்ளது.

2018-19 நிதியாண்டில் 6 ஆயிரத்து 801 வங்கி மோசடி சம்பவங்களும், 71 ஆயிரத்து 543 கோடி பண மோசடியும் நடந்துள்ளது.

இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள ரிசர்வ் வங்கி மோசடிகள் நடைபெற காரணம் வங்கிகளின் நிர்வாகம் மற்றும் தீவிர கண்காணிப்பில் உள்ள குறைகள் மற்றும் கடன் வழங்குவது, பெறுவதில் உள்ள அலட்சியத்தால்தான் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்