மகாராஷ்டிரா மாநிலத்தில் வங்கதேசத்தை சேர்ந்த 3 பெண்கள் சட்ட விரோதமாக தங்கி இருந்ததை அடுத்து அவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் தானே என்ற பகுதியில் உள்ள காவல்துறைக்கு வங்கதேசத்திலிருந்து வந்த சில பெண்கள் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து மூன்று பேர் தங்கி இருந்த இடத்திற்கு காவல்துறையினர் சோதனை செய்தபோது மூன்று வங்கதேசத்து பெண்கள் சட்ட விரோதமாக தங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது.
22 முதல் 29 வரை உள்ள அந்த பெண்கள் மீது சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் இருந்து பிழைப்பு தேடி இந்தியாவிற்கு நுழைந்த மூவரும் வீட்டு வேலைகள் செய்து வந்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து அவர்களுடைய உறவினர்கள் யாராவது இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக வந்திருக்கிறார்களா என்பதை குறித்து விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கொல்கத்தா உள்பட பல நகரங்களில் சட்டவிரோதமாக தங்கிய வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது மேலும் இருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.