பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 350 மாணவ–மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்

Webdunia
சனி, 20 செப்டம்பர் 2014 (08:31 IST)
பெங்களூரில் அரசு உருது தொடக்கப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 350 மாணவ–மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
 
பெங்களூர் கே.ஜி.ஹள்ளியில் அரசு உருது தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவ–மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
 
ஒரே நேரத்தில் அனைத்து மாணவ–மாணவிகளும் பாதிக்கப்பட்டதால் ஆசிரியர்கள் அச்சமடைந்தனர். தகவல் அறிந்ததும் தங்கள் குழந்தைகளைப் பார்க்க பெற்றோர் பள்ளியில் வந்து குவிந்தனர்.
 
பாதிக்கப்பட்ட மாணவ–மாணவிகள் ஆம்புலன்ஸ் வேன்கள் மூலம் டாக்டர் அம்பேத்கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
 
சாப்பாட்டில் பல்லி விழுந்ததே மாணவ–மாணவிகள் பாதிக்கப்பட்டதற்கு காரணம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.