எல்லாவற்றையும் இழந்துவிட்டேன்: பெங்களூரு விபத்தில் மனைவி, குழந்தையை இழந்தவர் வேதனை!

Webdunia
புதன், 11 ஜனவரி 2023 (17:35 IST)
எல்லாவற்றையும் இழந்துவிட்டேன்: பெங்களூரு விபத்தில் மனைவி, குழந்தையை இழந்தவர் வேதனை!
சமீபத்தில் பெங்களூரு மெட்ரோ பணிகளுக்காக கட்டப்பட்டிருந்த தூண் இடிந்து விழுந்து ஒரு பெண் மற்றும் இரண்டு வயது குழந்தை இறந்த நிலையில் அந்த பெண்ணின் கணவர் இது குறித்து கூறிய போது இந்த விபத்தால் நான் எல்லாவற்றையும் இழந்து விட்டேன் என்று கண்ணீர் வடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்துள்ளது. 
 
பெங்களூரில் மெட்ரோ ஓடுவதற்காக கட்டப்பட்ட தூண் ஒன்று இடிந்து விழுந்ததில் தேஜஸ்வினி மற்றும் அவரது இரண்டரை வயது மகன் விஹான் ஆகியோர் மரணம் அடைந்தனர் 
 
இந்த சம்பவத்தில் தேஜஸ்வனியின் கணவர் லோஹித் மற்றும் இன்னொரு குழந்தை உயிர் தப்பினர். இந்த நிலையில் இது குறித்து லோஹித் செய்தியாளர்களிடம் பேசிய போது எனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நான் பைக்கில் பயணம் செய்து கொண்டிருந்தபோது இந்த கொடூர சம்பவம் நடந்தது
 
இந்த விபத்தால் நான் எல்லாவற்றையும் இழந்து விட்டேன், இது போன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் சம்பவ இடத்தில் கட்டுமான பணிகளை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்