சிங்கப்பூர் பயணங்களை தவிர்க்க வேண்டும்; மத்திய அரசு வேண்டுகோள்

Arun Prasath
சனி, 22 பிப்ரவரி 2020 (19:10 IST)
கொரோனா வைரஸ் சிங்கப்பூரில் எதிரொலிக்கும் நிலையில், சிங்கப்பூருக்கான தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு மத்திய அரசு அறிவிறுத்தியுள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், கிட்டதட்ட 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸால் சீனாவில் மட்டுமே 2,345 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76,288 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா, “கொரோனா வைரஸ் எதிரொலி இருப்பதால் இந்தியர்கள் சிங்கப்பூர் செல்வதை தவிர்க்க வேண்டும் ” என அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், இந்தோனேசியா, மலேசியா, வியட்நாம், ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு சோதனை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்