பெட்ரோல் டீசல் விலை உயர்வால் உயரும் ஆட்டோ, டாக்சி வாடகை!

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (08:41 IST)
பெட்ரோல் டீசல் விலை உயர்வை தொடர்ந்து கேரளாவில் ஆட்டோ, டாக்சிகளுக்கான வாடகை கட்டண உயர்வு குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

 
நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக உயராமல் இருந்த நிலையில் நேற்று திடீரென எழுபத்தி ஆறு காசுகள் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
இந்நிலையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து இருப்பது அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக உள்ளது. சற்றுமுன் வெளியான  தகவலின்படி இன்று பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 75 காசுகள் உயர்ந்து உள்ளது என்றும் டீசல் விலை 76 காசுகள் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
விலை உயர்வை தொடர்ந்து கேரளாவில் ஆட்டோ, டாக்சிகளுக்கான வாடகை கட்டண உயர்வு குறித்து பரிசீலித்து அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ராமச்சந்திரன் தலைமையில் ஒரு  கமிட்டி நியமிக்கப்பட்டது. இந்த கமிட்டி கேரள அரசிடம் எவ்வளவு விலை உயர்த்தலாம் என அறிக்கை தாக்கல் செய்து உள்ளது. 
 
அதில் ஆட்டோகளுக்கான குறைந்தபட்ச கட்டணத்தை ரூ. 25ல் இருந்து ரூ. 30 ஆக  உயர்த்தலாம் எனவும் டாக்சிகளுக்கான குறைந்தபட்ச கட்டணத்தை ரூ. 175ல்  இருந்து ரூ.  210 ஆக உயர்த்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கட்டண உயர்வு குறித்து விரைவில்  முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்