இந்திய அரசியலமைப்பு சட்டம் 370 கூறுவது என்ன??

Webdunia
ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2019 (11:43 IST)
இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370-1 கீழ், விதி 35ஏ –வில் காஷ்மீர் மாநிலத்தின் நிரந்தரமாக குடிமக்கள் யார்?, அவர்களின் சலுகைகள் வரையறுக்கப்படுகின்றன.

1947 ஆம் ஆண்டு, இந்தியா பகிஸ்தான் பிரிவினையின் போது, காஷ்மீர் பகுதியை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என அப்போதைய காஷ்மீர் மன்னர் ஹரி சிங் வேண்டுகோள் விடுத்தார். அந்த வேண்டுகோளின் படி காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

அதன் பின் 1954-ல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆட்சியின் போது, அப்போதைய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் ஆணைப்படி காஷ்மீருக்கான தனி சலுகைகள் அரசியல் சாசன சட்டப்பிரிவு 370-ன் கீழ் சேர்க்கப்பட்டன.

காஷ்மீரில் வசிக்கும், நிரந்தர குடியுரிமையினர் தவிர, நாட்டின் வேறெந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் அங்கு நிலமோ சொத்தோ வாங்கமுடியாது. காஷ்மீரைச் சேர்ந்த பெண் ஒருவர் வேறு மாநிலத்தவரை திருமணம் செய்தால், அந்த பெண்ணின் குடியுரிமை ரத்து செய்யப்படும். ஆனால் 2002ல் காஷ்மீர் உயர்நீதிமன்றம் பெண்களுக்கு குடியுரிமை அளித்தது. ஆனால் அவர்களின் வாரிசுகளுக்கு கிடையாது.

இதை தொடர்ந்து காஷ்மீர் மாநிலத்தைச் சேராதவர்கள், அம்மாநில அரசு வேலையில் இடம்பெற முடியாது. அதே போல் காஷ்மீர் அரசு கல்லூரிகளிலும் மற்ற மாநிலத்தைச் சேந்தவர்கள் பயில முடியாது. மேலும் காஷ்மீர் அரசு வழங்கும் உதவுத் தொகை, சமூக நலத்திட்டங்கள் என எந்த நிதி உதவியும் காஷ்மீரின் நிரந்தர குடியுரிமை பெற்றவர்களே வாங்கமுடியும்.

ஓட்டுமொத்த இந்திய அரசியல் சானத்தில், ராணுவம், வெளியுறவு, தகவல் தொடர்பு போன்ற சட்டங்கள் மட்டுமே காஷ்மீரில் செல்லுபடியாகும். பிற சட்டங்கள் இங்கு செல்லுபடியாகாது. புதிய சட்டங்கள் ஏதும் நிறைவேற்ற வேண்டும் என்றால், மாநில அரசின் ஒப்புதல் வேண்டும். சட்ட திருத்தம் செய்யவேண்டும் என்றாலும் அரசியல் நிர்ணய சபையை கூட்ட வேண்டும்.

காஷ்மீருக்கான அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 370-ன் கீழ் வரும் இந்த சலுகைகளை தான் மத்திய அரசு ரத்து செய்யப் போவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்