செடிகளைச் சாப்பிட்ட ஆடுகள் கைது : உரிமையாளருக்கு அபராதம் !

Webdunia
வியாழன், 12 செப்டம்பர் 2019 (20:33 IST)
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் அரசாங்க வளாகத்தில், வளர்ந்திருந்த செடிகளை, இரண்டு ஆடுகள் தின்றுகொண்டிருந்தன. அதனைப் பார்த்த காவலர்கள் அதைக் கைது செய்து, அதன் உரிமையாளருக்கு அபராதம் விதித்தனர்.
 
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள அரசாங்கம் வளர்த்துவந்த செடிகளை, அருகில் மேய்ந்துவந்த இரண்டு ஆடுகள்  தின்றன. அப்போது, அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த காவலர்கள், அந்த ஆடுகளைப் பிடித்து வைத்து, அதன் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவருக்கு ரூ. 1000 அபராதம் விதித்தனர்.
 
ஆடுகள் அந்த செடிகளை மேய்ந்து தின்றது, இது முதல் தடவையல்ல.. ஏற்கனவே ,பலமுறை இதேபோல் 250 செடிகளை இந்த ஆடுகள் மேய்ந்துள்ளது. இது யார் என தெரியாமல் போலீஸார் இருந்து வந்த நிலையில் இன்று இந்த சம்பவம் நடந்துள்ளது.
 
இந்த செடிகள் சேவ் டிரீஸ் ( save trees )  என்ற அமைப்பினர் நட்டு, வளர்த்துவந்தனர்.இந்த செடிகள் அடிக்கடி மாயமாவதாக புகார் வந்ததை அடுத்து, போலீஸார் ஆடுகளைக் கைதுசெய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்