மணிப்பூரில் எம்எல்ஏக்களின் வீட்டிற்கு தீ வைத்த 41 பேர் கைது செய்யப்பட்டதாக வெளிவந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீ வைத்து சேதம் விளைவித்ததாக ஏற்கனவே 34 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இன்று மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டதால், மொத்தமாக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.
மணிப்பூரில் மைதேயி மற்றும் குகி ஆகிய இரண்டு சமூகங்களுக்கு இடையே கடந்த ஆண்டு முதல் கலவரம் நடைபெற்று வருகின்றது. இந்த கலவரத்தில் அவ்வப்போது மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 200 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 11 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், போராட்டத்தின் உச்சகட்டமாக நவம்பர் 16 ஆம் தேதி மணிப்பூர் முதல்வரின் வீட்டை போராட்டக்காரர்கள் தாக்கினார்கள். மேலும் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களின் வீடுகளுக்கும் தீ வைத்தனர். இதனால் பதட்டமான சூழ்நிலை நிலவி வந்தது. இதுவரை தீவைப்பு சம்பந்தமாக 41 பேர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.