அர்னாப் கோஸ்வாமிக்கு டெல்லி உயர்நீதி மன்றம் நோட்டிஸ்!!

Webdunia
வெள்ளி, 26 மே 2017 (12:04 IST)
பிசிசில் நிறுவனம் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் ஆசிரியராக பணியாற்றிவரும் அர்னாப் கோஸ்வாமி மீது வழக்கு பதிந்துள்ளது. 


 
 
ஊழியர் ஒப்பந்தத்தை மீறியது, டைம்ஸ் நவ் உடமையை தவறாக உபோகப்படுத்தியது போன்ற விஷ்யங்களால் வழக்கு பதியப்பட்டுள்ளது.
 
அர்னாப் கோஸ்வாமி டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் பணியாற்றிய போது, சுனந்தா புஷ்கர் மற்றும் லல்லு பிரசாத் யாதவ் பேசிய ஆடியோ பதிவை தற்போது ரிபப்ளிக் டிவியில் சட்டத்திற்கு புறம்பாக உபயோகித்துள்ளார்.
 
அதோ போல் டைம்ஸ் நவ் முன்னாள் நிருபர் பிரேமா ஸ்ரீதேவி மற்றும் சுனந்தா புஷ்கர் பேசிய ஆடியோவையும் ஒளிபரப்பியது. 
 
ரிபப்ளிக் டிவியில் ஒளிபரப்பப்பட்ட பின்பு தான் அந்த ஆடியோ பதிவு திருடுபோனது என்பது தெரியவந்தது. இந்நிலையில் அர்னார் கோஸ்வாமி குற்றவாளிக என்றும் டைம்ஸ் நவ்-வுக்கு சொந்தமான உடமைகளை திருடியுள்ளனர் என்றும் பிசிசில் குற்றம் சாட்டுகிறது.
அடுத்த கட்டுரையில்