இனி பெட்ரோல் போட பெட்ரோல் பங்க் போகவேண்டிய அவசியமில்லை

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2017 (17:14 IST)
இனி வாகனம் பெட்ரோல் இல்லாமல் நின்றுவிட்டால் கவலைப்பட தேவையில்லை. இனிமேல் நீங்கள் பெட்ரோல் பங்க் தேடி போக வேண்டாம். நீண்ட வரிசையில் நிற்க வேண்டாம். உங்கள் வீடு தேடி வருகிறது பொட்ரோல்.


 
 
இந்த வசதி பெங்களூரில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. mypetrolpump.com எனும் நிறுவனம் இந்த  நூதன சேவையை தொடங்கி உள்ளது. வீட்டில் இருந்தபடியே மற்றும் பாதி வழியில் பெட்ரோல் வாகனம் பெட்ரோல் இல்லாமல் நின்றாலும் சரி போன் செய்தால் போது நீங்கள் இருக்கும் இடம் தேடி பெட்ரோல் வரும். பெங்களூரின் எச்.எஸ்.ஆர் லே அவட் போன்ற இடங்களில் முல் முறையாக ஆரம்பித்துள்ள இந்த சேவை, தொடர்ந்து அனைத்து பகுதிகளுக்கும் இந்த சேவையை விரிவுபடுத்த இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்