திடீரென விழுந்த மின்னல்; படிப்பு செலவுக்கான பணம் கருகியது! – ஆந்திராவில் சோகம்!

Webdunia
ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (16:08 IST)
ஆந்திரா மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் இளைஞரின் படிப்பு செலவுக்கு வைத்திருந்த பணம் கருகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் கல்லா கிருஷ்ணவேணி. குடிசை வீட்டில் வாழ்ந்து வரும் இவர் தனது மகனின் படிப்பு செலவிற்காக சிறிது சிறிதாக பணம் சேர்த்து வைத்திருந்துள்ளார். இந்நிலையில் திடீரென குடிசையை மின்னல் தாக்கியதால் வீடு பற்றி எரிந்துள்ளது.

இதனால் கிருஷ்ணவேணி சேர்த்து வைத்திருந்த ரூ.20 லட்சம் ரொக்கம், 5 சவரன் நகை ஆகியவை தீயில் கருகியுள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தங்களுக்கு அரசு உதவ வேண்டும் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்