83 நாடுகளுடன் அறிவியல் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம்

Webdunia
சனி, 23 ஆகஸ்ட் 2014 (12:13 IST)
ஐரோப்பிய நாடுகள் உட்பட மொத்தம் 83 நாடுகளோடு இந்திய அறிவியல் தொழில்நுட்பக் கழகம், ஒத்துழைப்பு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. தற்போது நாம் அறிவியல் தொழில்நுட்ப ஒப்பந்தத்தை 45 நாடுகளுடன் இணைந்து தீவிரமாகக் கூட்டு ஆராய்ச்சி செய்து வருகிறோம்.
 
இது இந்த மாதம் 6ஆம் தேதியின் நிலவரமாகும். அதன்படி 2013ஆம் ஆண்டு இந்தியாவில் மொத்த 66,580 ஆராய்ச்சிக் கட்டுரைகள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ளது. இதில், 28,551 ஆராய்ச்சிக் கட்டுரைகள், சர்வதேசக் கூட்டு ஆராய்ச்சி மூலமாக எழுதப்பட்டது.
 
இந்திய - ஆப்பிரிக்கா அமைப்பு மாநாட்டில் இந்திய அரசு, ஆப்பிரிக்க நாடுகளுடன் அறிவியல் தொழில்நுட்ப ஒத்துழைப்பு முயற்சியைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் வளரும் நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள், ஆராய்ச்சிக்காவும் பயிற்சிக்காகவும் இந்திய நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள்.
 
இதோடு ஆஸ்திரேலியா, ஜெர்மனி, அங்கேரி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து அர்ப்பணிக்கப்பட்ட ஒன்றிணைந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கூட்டு நிதி நிறுவப்பட்டுள்ளது.
 
கூடுதலாக, கூட்டுத் திட்டம் சார்ந்த நடவடிக்கைகள், இரு தரப்பு பயிற்சி வகுப்புகள், வெளிநாட்டில் உள்ள பெரிய அறிவியல் வசதிகளை அணுகவும் அரசு துணை புரிகிறது.