10-ம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தோல்வி; பள்ளிகளை மூட அசாம் அரசு உத்தரவு!

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (20:56 IST)
அசாம் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தோல்வியடைந்ததை அடுத்து 34 பள்ளிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
சமீபத்தில் அசாம் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு நடந்தது.இதில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் அதில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என தெரியவந்துள்ளது. 
 
இதனை அடுத்து பள்ளிகளுக்கு மக்களின் வரிப்பணம் செலவிடுவது அர்த்தமற்றது என்று கூறிய கல்வி அமைச்சர் மனோஜ் 34 பள்ளிகளை மூட உத்தரவிட்டு உள்ளார்
 
மிகவும் குறைவாக ஒரு சில மாணவர்களுடன் பள்ளிகள் இயங்குவதும் சில பள்ளிகளில் இரண்டு முதல் மூன்று மாணவர்கள் மட்டுமே இருந்ததாகவும் கூறப்படுகிறது 
 
இதனை அடுத்து குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை அரசு எடுத்துள்ளதாக தெரிகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்