அஜந்தா குகைகள்: உலகமே வியக்கும் அதிசயம்!!

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2017 (15:31 IST)
அஜந்தா குகைகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ளது. இது குடைவரைக் கோயில்களில் ஒன்று. இதுதான் உலகின் முதல் புத்த கட்டுமான ஆலயமாக கருதப்படுகிறது. 


 
 
ஏப்ரல் 1819-ல் சென்னை மாகாணத்தைச் சேர்ந்த அதிகாரியான ஜான் ஸ்மித் இந்த குகையை கண்டுபிடித்தார் என கூறப்படுகிறது.
 
இங்கு மலையை குடைந்து 29 குடைவரை கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த குகையில் காணப்படும் ஓவியங்களும், சிலைகளும் புத்தரின் பல்வேறு அவதாரங்களாக கருதப்படுகின்றன.
 
கிமு 200-ல் தொடங்கி கிபி 6 ஆம் நூற்றாண்டு வரை இக்குகை கோவிலை கட்டியுள்ளனர். 
இவை அனைத்தும் புத்தமதக் கொள்கைகளை முதன்மைப்படுத்தியும், புத்தரின் வாழ்க்கை வரலாற்று சம்பவங்களை சித்தரித்தும் உருவாக்கப்பட்டவை.
 
தற்போது இவை இந்தியத் தொல்பொருள் துறையினரால் பராமரிக்கப்பட்டுவருகின்றன.
அடுத்த கட்டுரையில்