நாடு முழுவதும் வெப்ப அலை வாட்டி வரும் நிலையில் வெப்பத்திலிருந்து மக்களை காக்க குடைகளை கட்டி தொங்க விட்டுள்ளது வைரலாகியுள்ளது.
நாடு முழுவதும் கோடைக்காலம் காரணமாக நாளுக்கு நாள் வெப்ப அலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் தென் மாநிலங்களில் அதிகளவில் வெப்பநிலை பதிவான நிலையில் தற்போது வடமாநிலங்கள் அதிகளவிலான வெப்ப அலையை எதிர்கொண்டு வருகின்றன. வெப்பத்தில் தாக்கு பிடிப்பதற்காக பல மாநிலங்களிலும் குடிநீர் பந்தல்கள், நிழற்குடைகல் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வெப்பத்தை சமாளிக்க புதுமையான முயற்சியை எடுத்துள்ளனர். அதன்படி பாதசாரிகள் நடந்து செல்ல அமைக்கப்பட்டுள்ள பாதைகளில் மேலே கயிறுகளை கட்டி குடைகளை கட்டி தொங்க விட்டுள்ளனர். இதனால் கோடை வெப்பம் அவ்வழியாக நடந்து செல்பவர்கள் மீது விழாது என கூறப்படுகிறது.
Umbrellas
ஆனால் ஒரு குறிப்பிட்ட பாதையை குடைகளால் மூடுவதற்கு மட்டுமே சுமார் 800+ குடைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறாக அனைத்து நடைபாதைகளையும் குடைகளால் மூடுவது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இது பார்ப்பதற்கு அழகாக இருக்கும் அதேசமயத்தில் வெயிலில் இருந்து காக்கும் என சிலர் கூறுகிறார்கள்.