சீனாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து இந்தியாவில் அடுத்த நாற்பது நாட்கள் கடுமையான நாட்கள் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனை அடுத்து மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்என்ற முறையை நடைமுறைப்படுத்த பல ஐடி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு சில நிறுவனங்கள் தற்போது மூன்று நாட்கள் அலுவலகம் வந்தால் போதும் இரண்டு வொர்க் ப்ரம் ஹோம்என அறிவித்துள்ள நிலையில் மற்ற நிறுவனங்களும் இதே முறையை கடைபிடிக்கலாம் என்று கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கினால் மீண்டும் முழுவதுமாக வொர்க் ப்ரம் ஹோம்என்ற முறையை நடைமுறைப்படுத்த டிசிஎஸ் உள்பட பல ஐடி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.